கொள்ளையரை பிடிக்க ஓசி பெட்ரோல், பணம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, காவலர் மீது வழக்கு: ஐகோர்ட் உத்தரவுப்படி விஜிலென்ஸ் அதிரடி

4 weeks ago 5

திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. பெட்ரோல் பங்க் நடத்துகிறார். அதன் அருகே வீடும் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 80 பவுன் தங்க நகைகள், ரூ.3.23 லட்சம் பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணை என்ற பேரில் கருப்பையா குடும்பத்தினர் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், கருப்பையாவின் பெட்ரோல் பங்க்கில் போலீசாரின் டூவீலர், ஜீப் மற்றும் கார்களுக்கு அவ்வப்போது பெட்ரோலும், கொள்ளையரை தேடி செல்லும் செலவிற்காக பணமும் பெற்றதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் வீட்டில் திருடிய நபரை கைது செய்ததை அறிந்து போலீஸ் ஸ்டேஷன் சென்று கருப்பையா கேட்டு உள்ளார். அப்போது 25 பவுன் நகைகள் மட்டும் தான் தர முடியும் என போலீசார் கூறியதாகவும், மீதி நகை, பணம், கைகடிகாரத்திற்கு சரியான பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐேகார்ட் கிளை, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டராக இருந்த சந்திரமோகன் (தற்போது சிவகங்கை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்), எஸ்ஐ அழகர்சாமி, போலீஸ்காரர் வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கொள்ளையரை பிடிக்க ஓசி பெட்ரோல், பணம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, காவலர் மீது வழக்கு: ஐகோர்ட் உத்தரவுப்படி விஜிலென்ஸ் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article