கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

3 months ago 7

கொள்ளிடம்,பிப்.10: கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டிணம் கடைவீதியிலிருந்து மடவாமேடு கடலோர கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் புதுப்பட்டினம் கடைவீதியில் இருபுறங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய அகலம் சாலையில் இல்லாமல் இருந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சாலையின் இருபுறங்களிலும் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சாலையின் அகலம் இயல்பை விட குறைந்துள்ளது.அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த வழியே செல்லும்போது மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றன. புதுப்பட்டினம் கடைவீதிக்கு வந்து செல்லும் பொது மக்களும் அவதி அடைந்து வருகின்றனர் சீரான போக்குவரத்து ஏற்படுவதில் சிரமம் இருந்து வருகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே புதுப்பட்டினம் கடைவீதியில் 200 மீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியை அகற்றி நெடுஞ்சாலையில் சீரான போக்குவரத்து நடைபெற ஆவன செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article