கொள்ளிடம் அருகே கடவாசலில் முழு கிராம சுகாதார தூய்மை பணி

4 months ago 15

 

கொள்ளிடம், ஜன. 5: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின்பேரில் கொள்ளிடம் அருகே அளக்குடி, ஆரப்பள்ளம்,கடவாசல் ,அகர எலத்தூர், திருக்கருகாவூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளில் முதற்கட்டமாக நேற்று முழு கிராம தூய்மைப் பணி நடைபெற்றது.இதில் ஊராட்சிகளில் தேங்கியுள்ள அனைத்து குப்பைகளும் சேகரித்து அகற்றப்பட்டன.

கொள்ளிடம் அருகே கடவாசல் ஊராட்சியில் நடைபெற்ற தூய்மை பணி மற்றும் கலைஞரின் கனவு இல்ல பணிகளை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சபீர் ஆலம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ், சுமதி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன்,பூர்ணசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், ஊராட்சி செயலாளர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கொள்ளிடம் அருகே கடவாசலில் முழு கிராம சுகாதார தூய்மை பணி appeared first on Dinakaran.

Read Entire Article