குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். குழந்தை வரம் வேண்டுவோர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கினால் அவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
இந்நிலையில் இந்த கோவிலில் பச்சிளங் குழந்தைகளுக்காக தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. தூக்க நேர்ச்சை ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கும். இந்த ஆண்டு கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழா நாளான இன்று 1166 பச்சிளங் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்றது. பச்சிளங் குழந்தைகளை ஏந்தி செல்வதற்காக தூக்கக்காரர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் 10 நாட்கள் கோவிலில் தங்கியிருந்தது, விரதம் மேற்கொண்டு தூக்க நேர்ச்சைக்கு ஆயத்தமாகினர்.
40 அடி உயரமுள்ள மரத்திலான வில்லில் தூக்கக்காரர்கள் கட்டப்பட்டு அவர்களின் கையில் குழந்தைகள் கொடுக்கப்பட்டு அம்மன் எழுந்தருளியுள்ள கோவிலை வடமிழுத்து சுற்றி வலம் வந்து தூக்க நேர்ச்சை மேற்கொள்ளப்பட்டது. இத்திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை appeared first on Dinakaran.