கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சியல்டா நீதிமன்றம் தீர்ப்பு

3 hours ago 2

கொல்கத்தா: நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என கடந்த 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று தண்டனை விபரங்கள் அளிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சஞ்சய் ராய் எனபவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக சியல்டா மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதனை கடந்த 18-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ சஞ்சய்ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்மொழிந்தது. இதனை அடுத்து சஞ்சய்ராய்-யை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் தண்டனையை இன்று அறிவிப்பதாக தெரிவித்தது.

இன்று தண்டணை விவரங்களை அறிவித்த நீதிபதி; இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு அல்ல. எனவே குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் பெண் மருத்துவர் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சியல்டா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article