கொலை சதி நடந்ததாக பொய்த் தகவல்: மதுரை ஆதீனத்தை பதவி நீக்கம் செய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

3 hours ago 3

மதுரை: தன்னை கொல்ல சதி நடந்துள்ளதாக பொய்த் தகவல் பரப்பிய மதுரை ஆதீனத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டுக்குச் செல்லும் போது உளுந்தூர் பேட்டை அருகே வாகன விபத்து ஏற்பட்டதற்கு காரணம் நம்பர் பிளேட் இல்லாத குல்லா போட்ட தாடி வைத்தவர்கள் என்றும், வெகு தூரம் துரத்தி வந்து சாலைத் தடுப்பை உடைத்துவந்து எங்கள் கார் மீது மோதி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் என்றும் என்னை (ஆதீனத்தை) கொல்ல சதி என்றும் மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

Read Entire Article