கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாட்டம்

5 months ago 34

மேட்டூர், அக்.4: மேச்சேரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் பிரதான சாலையில், 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் எம்.எம் சில்க்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவையொட்டி நேற்று மாலை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டன. நவகிரகங்கள், கடல்கஜம், கும்பகர்ணன், வளைகாப்பு, திருமணம், அரசவை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டது. காய் கனிகளும், பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் காட்சி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எம்எம் சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் முருகேசன், வளர்மதி நிறுவனர் மணியன், பச்சையம்மாள் மணியன் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article