கொலம்பியா நாட்டின் கடற்பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை ஆமை

3 months ago 25
மீன்பிடி வலையில் சிக்கிய 20 வயது அரியவகை கடல் ஆமையை கொலம்பியா நாட்டு கடற்படை மற்றும் உயிரியலாளர்கள் மீட்டு உரிய சிகிச்சை அளித்த பின் மீண்டும் கடலில் விடுவித்தனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கோர்கோனா தேசிய இயற்கை பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலையில் ஆமை சிக்கியிருந்தது. உடனடியாக வலையை அறுத்து அதற்கு உரிய சிகிச்சை கிடைக்க உயிரியலாளர்கள் ஏற்பாடு செய்தனர். பின்னர், ஆமையை அடையாளப்படுத்த தகடு ஒன்றை உடலில் பொருத்தி மீண்டும் கடலில் விடுவித்தனர்.
Read Entire Article