கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் - 2 பேர் கைது

2 months ago 10
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 6ஆம் தேதி கொத்தனாரிடம் இருந்து ஏழரை லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த நான்கு பேர் கும்பலில் இருவரை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தைலாகுளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி, வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது, அவரை பின் தொடர்ந்து இரண்டு டூவீலர்களில் வந்தவர்கள் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். புகார் குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், நாகராஜ், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து பணத்தை மீட்டதாகவும், சிவா மற்றும் முத்துவேல் ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் தெரிவித்தனர்
Read Entire Article