திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் நாளை முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் இயந்திரம்,போர் வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களால் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக இயற்கை வளங்களை பாதிக்கும் வண்ணம் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் இயந்திரம், போர் வெல் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தையும் நாளை இரவுக்குள் தரைப்பகுதிக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நாளை முதல் இந்த கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம். அதே போல முதல் முறை அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து கனரக வாகனங்கள் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.
The post கொடைக்கானல் மலையில் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை: கோட்டாட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.