திண்டுக்கல்: தமிழ்நாடு மாநில போக்குவரத்து அதிகாரி அறிவுறுத்தலின்படி பொதுநலன் கருதியும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப்புள்ளியை தாண்டி செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வந்துள்ளது.
12.மீ நீளத்திற்கு மேல் உள்ள வாகனங்கள் மலைச்சாலையில் திரும்புவதற்கு சிரமமாக இருப்பதால் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாகன நெரிசலை குறைக்க இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 12 மீட்டருக்கு மேல் நீள வாகனங்களுக்கு தடை உத்தரவும் அமலுக்கு வந்துள்ளது.
இதற்காக வத்தலக்குண்டு, பழநி மலையடிவாரங்களிலேயே சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சோதனை செய்த பின் ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்றன. இதன்மூலம் கொடைக்கானல் மலைச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post கொடைக்கானல் மலைப்பகுதிக்கு 12 மீ நீளத்திற்கு மேலாக உள்ள வாகனங்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் விதித்த தடை அமல் appeared first on Dinakaran.