கொடைக்கானலுக்கு செல்ல மாற்றுப்பாதை?

3 months ago 23

திண்டுக்கல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அப்போது கொடைக்கானல் நகர் பகுதிகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடையும் சூழல் உள்ளது.

இதனை தவிர்க்க கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்க பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேற்று மலைப்பாதையில் நடந்து வரும் ஆய்வு பணிகளை பார்வையிட்டார்.

Read Entire Article