கொடைக்கானலில் வாகனக்கட்டுப்பாடு நாளை முதல் அமல்

2 days ago 4

கொடைக்கானல்: நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானலுக்கு நாளை முதல் வார நாட்களில் 4,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் முடிந்ததால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் 100 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. அதேநேரம் கொடைக்கானலில் தற்போது கோடை குளிர் சீசன் துவங்கி பகலில் மிதமான வெயிலும், இரவில் குளிரும் என இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

இதனை ரசிப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். நேற்று மோயர் பாய்ண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு குவிந்து இயற்கை அழகை ரசித்தனர். இதனிடையே ேகார்ட் உத்தரவுப்படி கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும் மட்டுமே நாளை (ஏப்ரல் 1) முதல் அனுமதிக்கப்பட உள்ளது.

The post கொடைக்கானலில் வாகனக்கட்டுப்பாடு நாளை முதல் அமல் appeared first on Dinakaran.

Read Entire Article