கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த EV, கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம்: ஐகோர்ட் யோசனை

2 hours ago 1

சென்னை: உதகை, கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த EV, கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை வழங்கி உள்ளது. மலை வாசஸ்தலங்களில் கண்ணாடி பேருந்து வசதிகளை செய்து தருவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், உதகை, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கூடுதலாக சுய உதவிக்குழுவினர் பணியில் உள்ளனர் என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்காலிகமாக மலை வாசஸ்தலங்களுக்கு எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என விளக்கமளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி வழக்கை மார்ச் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

 

The post கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த EV, கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம்: ஐகோர்ட் யோசனை appeared first on Dinakaran.

Read Entire Article