கொடைக்கானலில் இறந்த குட்டியுடன் சுற்றித்திரியும் தாய் குரங்கு

8 hours ago 1

கொடைக்கானல்,

கொடைக்கானலில் தனது குட்டி இறந்துவிட்டது என்பது கூட தெரியாமல் அதனை தூக்கிக்கொண்டு ஒரு குரங்கு சுற்றித்திரியும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா இடமான பைன்மரக்காடு பகுதியில் தான் அந்த குரங்கு, தனது குட்டியுடன் சுற்றித்திரிந்தது.

அப்போது குட்டி குரங்கு பெரிய மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதில், அந்த குட்டி குரங்கு இறந்துவிட்டது. ஆனால் குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு, அதனை தனது அரவணைப்பில் வைத்துக்கொண்டு வனப்பகுதி முழுவதும் சுற்றித்திரிகிறது. அந்த குரங்கை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பரிதாபத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், "குட்டிகள் இறந்தாலும் கூட தாய் குரங்குகளுக்கு அது தெரியாத காரணத்தால் தன்னுடைய அரவணைப்பிலேயே வைத்துக்கொள்ளும். உடல் அழுகி, அதற்குரிய வாசனை வெளியே வந்த பின்னர் தான் தாய் குரங்கு அதனை அகற்றும்" என்றனர்.

Read Entire Article