கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி அணைக்கு நேற்று மட்டும் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இந்நிலையில் கொடிவேரி அணையில் ஏராளமான நகை அணிந்து கொண்டு ஒருவர் குளித்துக்கொண்டு இருப்பதாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பங்களாபுதூர் போலீசார் அந்த வாலிபர் குளித்துக்கொண்டு இருந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அந்த நபரை சுற்றி உள்ள கும்பலையும் போலீசார் கண்காணித்துள்ளனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகியும் அந்த நபர் அணையில் இருந்து வெளியேறவில்லை. அந்த நபரை சுற்றிலும் கூட்டம் அதிகரிக்கவே பாதுகாப்பு கருதி பணியில் இருந்த போலீசார் அணைக்குள் சென்று அந்த நபரை வெளியே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சென்னை, பல்லாவரத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் விஜய் என்பதும், பொங்கல் விடுமுறைக்கு கொடிவேரி அணைக்கு குடும்பத்துடன் வந்து இருப்பதும் தெரிய வந்தது.
The post கொடிவேரி அணையில் 300 பவுன் நகையுடன் குளித்த அதிமுக பிரமுகர் வெளியேற்றம்: சென்னையை சேர்ந்தவர் appeared first on Dinakaran.