கொங்கு மெட்ரிக் பள்ளி 33வது ஆண்டு விழா

3 months ago 21

 

பரமத்திவேலூர், அக்.7: பரமத்திவேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 33வது ஆண்டு விழா, பள்ளியின் தலைவர் ஆடிட்டர் கிருத்திக்லோகேஷ் தலைமையில் நடந்தது.
பள்ளிச் செயலாளர் தங்கராஜ், இணை செயலாளர் வழக்கறிஞர் நடராஜன், பொருளாளர் தியாகராஜன், துணைத் தலைவர் சுப்ரமணியம், போக்குவரத்து இயக்குனர் வழக்கறிஞர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் காந்திமதி வரவேற்றார். விழாவில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள மாநில ஆளுநருமான சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10,11,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஆசிரியர்களுக்கு வெகுமதி, நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் இயக்குனர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். …

The post கொங்கு மெட்ரிக் பள்ளி 33வது ஆண்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article