கை வைத்தியம் அறிவோம்!

1 month ago 10

நன்றி குங்குமம் டாக்டர்

தலை பாரமாக இருந்தால், வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகிவிடும்.ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறவிட்டு வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

காலையிலும், மாலையிலும் தேங்காய்ப்பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் ஆறிவிடும்.செம்பருத்தி இலையைக் காயவைத்து, பொடிசெய்து தினமும் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.சுக்கு, வெள்ளை மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் சீரகத்தை, நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சைச்சாறுப் பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்து இருப்பதைக் காணலாம்.வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரிந்து கற்கள் கரைந்து விடும்.

ஒரு டம்ளர் நீரில் நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு நன்கு கலந்து, 10 சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து குடித்தால், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கி உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.பித்தம் அதிகரித்து தலைசுற்றல், வாய்க் கசப்பு இருந்தால் மாதுளம்பழ ஜூஸை தேன் கலந்து பருகலாம்.பயத்தம்பருப்பை குழைய வேகவிட்டு சிறிது வறுத்த கசகசாவைப் பொடித்துப் போட்டு கடைசியில் தேங்காய்ப்பால் விட்டு ஆறியதும் குடித்து வர அல்சர் குணமாகும். வாய்துர்நாற்றம் நீங்கி, நெஞ்செரிச்சல் வரவிடாது.

அரைநெல்லிக்காயுடன் சிறிதளவு உப்பு, 2 மிளகு, கால் தேக்கரண்டி சீரகம் வைத்து அரைத்து மோருடன் குடிக்க காமாலை குணமாகும்.பெரிய நெல்லிக்காய், கறிவேப்பிலை, கொஞ்சம் பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை மிக்ஸியில் துவையலாக உப்பு சேர்த்து சீரகத்துடன் மிளகு வைத்து சாப்பிட இளநரை மறையும். கண் பார்வையை மேம்படுத்தும். பிரண்டையை துவையலாக அரைத்து சாப்பிட எலும்புகள் பலப்படுவதுடன் வயிறு உப்புசம், வாயு கோளாறுகளைப் போக்கும்.

பூண்டு, வெங்காயம், தக்காளி, நச்சுக் கொட்டைக் கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து சட்னி செய்து அடிக்கடி சாப்பிட வாதம் வராது.
அத்திப்பழம், பேரீச்சைப்பழம் சமஅளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். பனை வெல்லத்தில் பாகு வைத்து அரைத்த விழுது சேர்த்து ஜாம்போல் செய்து அடிக்கடி சாப்பிட ரத்தசோகை வராது.

தொகுப்பு: ரிஷி

The post கை வைத்தியம் அறிவோம்! appeared first on Dinakaran.

Read Entire Article