பெரம்பலூர்,ஜன.24: கை.களத்தூரில் நடைபெற்ற கொலை சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க். கம்யூ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, கை.களத்தூரில் காவலர் கண்முன்பு தலித் இளைஞர் மணிகண்டன் என்பவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப் பட்டார்.இதனை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க். கம்யூ. கட்சி ஆகிய வற்றின் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் கருணாநிதி, கட்சி கமிட்டி செயலாளர்கள் பெரம்பலூர் (நகரம்) இன்பராஜ், (ஒன்றியம்) பெரியசாமி, (குன்னம்) செல்லமுத்து, (மின்னரங்கம்) பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சாமி. நடராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் செல்ல துரை, ஏ.கே.ராஜேந்திரன், கலையரசி, ரெங்கநாதன், டாக்டர் கருணாகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கவிஞர் எட்வின், கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மணி கண்டன் படுகொலையில் தொடர்புடையை அனைவர் மீதும் மற்றும் காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், மணி கண்டனின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடும்,
அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும், குற்ற வாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதை தடுக்கும் வகையில், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தலித் மக்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து, கைது செய்வதைக் கைவிட்டு,வழக்கை வாபஸ் பெற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப் பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூ. கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post கை.களத்தூரில் கொலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.