கோவாவில் பாஜக வகுப்புவாதத்தை தூண்டுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

3 months ago 22

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி., தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோவாவின் ஈர்ப்பே அதன் இயற்கை எழில்மிகு அழகு மற்றும் அங்குள்ள மாறுபட்ட மற்றும் இணக்கமான அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலில் உள்ளது. துரதிருஷ்டவசமாக, அங்கிருக்கும் பாஜக ஆட்சியில் இது தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

பாஜக அங்கு வேண்டுமென்றே வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டுகிறது. அங்கு முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர், கிறிஸ்தவர்கள் மற்றும் சங்க பரிவார் அமைப்பினரை துண்டி விட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பொருளாதர புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.நாடு முழுவதும் சங்க பரிவாரைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயல்களை உயர்மட்டத்தில் இருப்பவர்களின் ஆதவுடன் செய்கின்றனர்.

கோவாவில் பாஜகவினரின் குயுக்தி மிகவும் தெளிவாக உள்ளது. மக்களைப் பிரிக்கும் அதே வேளையில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சட்டவிரோதமாக பசுமை நிலங்களாக அறிவித்து அதைச் சுரண்டுவது. சுற்றுச்சூழல் விதிகளை மீறுவதன் மூலம் கோவாவின் இயற்கை மற்றும் சமூக பாரம்பரியத்தின் மீது தாக்குதல் தொடுப்பது. பாஜகவின் இந்த செயல்கள் ஒருபோதும் நிற்காது. கோவா மற்றும் ஒட்டுமொத்த தேசமும் இந்த பிளவுபடுத்தும் கொள்கையைப் பார்த்து அதற்கு எதிராக அணிதிரள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article