கேலோ இந்தியா பாராவில் தமிழ்நாடு 2வது இடம்: மன்கிபாத்தில் மோடி பாராட்டு

2 days ago 5

புதுடெல்லி: பிரதமர் மோடி இன்று 120வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஏப்ரல் மாதத்தில் வரும் நவராத்திரி, ஈத் போன்ற பண்டிகைகள் வருகின்றன. இந்த மாதம் முழுவதும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கும். உடலுறுதியோடு இருத்தல், உடலுறுதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றை இலக்காக கொண்டு முதன்முறையாக புதுதில்லியில் ஃபிட் இண்டியா கார்னிவல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகள் மூலம் நமது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 18 தேசிய சாதனைகளை படைத்துள்ளனர். இவற்றில் 12 சாதனைகளை பெண் விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஹரியானா, தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஹரியானா, தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மழைநீரை சேகரிப்பதன் மூலம் நாம் நிறைய நீரை வீணாகாமல் சேமிக்க முடியும். முடிந்தால் கோடை காலங்களில் வீட்டிற்கு முன்பாக பானையில் தண்ணீர் வையுங்கள். வீட்டின் மாடியில் பறவைகளுக்காக நீர் வையுங்கள் என்று பேசினார்.

The post கேலோ இந்தியா பாராவில் தமிழ்நாடு 2வது இடம்: மன்கிபாத்தில் மோடி பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article