கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2,100 லிட்டர் கெரசின் பறிமுதல்

2 months ago 12
குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தில் இருந்து சொகுசு வேனில் கேரளாவுக்கு கடத்த முயன்ற, மீனவர்களின் படகுகளுக்கு அரசு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணை 2100 லிட்டரை கொல்லங்கோடு போலீசார் பறிமுதல் செய்தனர். கண்ணனாகம் சந்திப்பில் போலீசாரின் வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்ற கேரள பதிவெண் கொண்ட சுற்றுலா வேனைப் போலீசார் பின்தொடர்ந்து கல்வெட்டான்குழியில் மடக்கியதாகவும், அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 60 கேன்களில் மண்ணெண்ணையை கடத்திச் சென்ற பொழியூரைச் சேர்ந்த வில்சனைக் கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article