கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு

3 months ago 21

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரை பகுதியில் வீடு ஒன்றில் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த தம்பதி பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இந்த தம்பதியினர் இன்று பள்ளிக்கு போகாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது தம்பதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்களது மகனும், மகளும் படுக்கையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். இதையடுத்து 4 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பண பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Entire Article