
திருவனந்தபுரம்,
கேரளாவில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவனந்தபுரம், பத்தினம் திட்டம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. "மஞ்சள்" எச்சரிக்கை என்பது, வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கைகளில் ஒரு முதல் நிலை எச்சரிக்கையாகும், இது மிதமான மழை பெய்யும் என்பதை குறிக்கும் வகையில் வானிலை மையத்தால் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், கேரளாவிலும் மழை பெய்து வருவது கவனிக்கத்தக்கது.