கேரளாவின் மிக நீளமான ஜிப்லைனில் ராகுல் காந்தி பயணம்

1 week ago 3

திருவனந்தபுரம்,

வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது . இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பிரியங்கா காந்தி வெற்றி பெற்றால் வயநாடு தொகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் கராப்புழா அணை பகுதிக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வருகை தந்தனர்.

அங்கு அமைந்துள்ள கேரளாவின் மிக நீளமான ஜிப்லைனில் ராகுல் காந்தி பயணம் செய்தார். இதனை, 'தென்னிந்தியாவின் மிகப்பெரிய ராட்சத ஊஞ்சல்' என்று வர்ணித்த ராகுல் காந்தி, வயநாடு எப்போதும்போல் பிரமிக்க வைக்கிறது என்றும், ஜிப்லைனில் சென்ற ஒவ்வொரு நொடியும் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Read Entire Article