
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஸ்வகதமடு கிராமத்தை சேர்ந்தவர் படரியா (வயது 33). இவர் தனது மகனுடன் கடந்த 26ம் தேதி காலை கோட்டுக்கல் பகுதியில் நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த கார், சாலையோரம் நடது சென்றுகொண்டிருந்த படரியா மீது மோதியது. இதில், படரியா தூக்கி வீசப்பட்டார். அவரது மகன் மீது கார் மோதாமல் சென்றது.
கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட படாரியா படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் படாரியாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படாரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.