கேரளா: சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து - 5 தமிழர்கள் பலி

7 months ago 22

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அவ்வழியாக வரும் வகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. சாலைப்பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லாரி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீசார் கைதுசெய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் லாரியை இயக்கியது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Read Entire Article