கேரளா: கோவிலில் தீ விபத்து - அர்ச்சகர் உயிரிழப்பு

3 months ago 25

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கிளிமானூரில் உள்ள கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த அர்ச்சகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிளிமானூரில் உள்ள புதியகாவு பகவதி கோவிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ஜெயக்குமரன் (49 வயது). இவர் கடந்த மாதம் 30-ந்தேதி கோவிலில் பிரசாதம் சமைக்கப்படும் திடப்பள்ளி எனும் அறைக்கு கையில் விளக்குடன் சென்றார்.

அவர் திடப்பள்ளி அறையின் கதவைத் திறந்ததும் அந்த அறையில் திடீரென தீப்பிடித்து அவரது உடல் முழுவதும் பரவியது. அங்கிருந்த பக்தர்கள் அவர் மீது பரவிய தீயை அணைத்து, பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயக்குமரன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த அறையில் இருந்த சமையல் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article