கேரள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதா? பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்

4 months ago 15

சென்னை,

கேரள மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கேரள வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்த போது மருத்துவ கழிவுகள் விவகாரத்தை தமிழக அரசு வக்கீல் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கேரள மருத்துவக்கழிவுகளை முறைப்படி அகற்றுவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளாமல் ஏன் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேரள அரசுக்கு கேள்வி எழுப்பினர். பின்னர், கேரளாவில் இருந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு உரிய செலவு தொகையை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Read Entire Article