கேரள போலீசில் புகார் பிரபல நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ கசிந்ததா?

3 months ago 17

திருவனந்தபுரம்: பிரபல நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ எக்ஸ் இணையதளத்தில் லீக் ஆனதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007ல் கங்காரு என்ற மலையாளப் படத்தில் நடிகர் பிரித்விராஜின் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. இதன்பின் தமிழ் சினிமாவுக்கு வந்த இவர் களவாணி, மெரினா, கலகலப்பு, மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமேன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் எக்ஸ் இணையதளத்தில் ஒரு ஆபாச வீடியோ வெளியானது. அதில் இருப்பவர் நடிகை ஓவியா தான் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஓவியா தன்னுடைய கையில் டாட்டூ வரைந்திருப்பார். அதேபோல டாட்டூ அணிந்த பெண் தான் அந்த ஆபாச வீடியோவிலும் உள்ளார். எனவே அந்த வீடியோவில் இருப்பது ஓவியா தான் என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது டீப் ஃபேக் வீடியோ என்று சிலர் கூறுகின்றனர். இதுபோல பல பிரபலங்களின் டீப் ஃபேக் வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இந்த வீடியோ குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு ரசிகரின் கேள்வியும், அதற்கு நடிகை ஓவியா அளித்த அதிரடி கமென்ட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ 17 வினாடிகள் தான் இருக்கிறது. கூடுதல் நேரம் உள்ள வீடியோவை பகிர முடியுமா என்று ஒருவர் ஓவியாவின் எக்ஸ் இணையதளத்தில் கேட்டுள்ளார். அதற்கு, அந்த வீடியோவை பார்த்து என்ஜாய் பண்ணுங்க ப்ரோ, அடுத்த தடவை பார்க்கலாம் என்று நக்கலாக ஓவியா பதில் அளித்துள்ளார். ஓவியாவின் இந்த அதிரடி கமென்ட் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதுகுறித்து நடிகை ஓவியா கேரள போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

The post கேரள போலீசில் புகார் பிரபல நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ கசிந்ததா? appeared first on Dinakaran.

Read Entire Article