கேரள கவர்னர் ஆடையில் தீ பிடித்ததால் பரபரப்பு

7 months ago 37

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே அகத்தேதரை பகுதியில் சபரி ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் 100வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவின் தொடக்கத்தில் அவர் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திவிட்டு விளக்கு ஏற்றினார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் தோளில் போட்டிருந்த ஆடையில் தீ பிடித்தது. அதை கவனித்த மேடையில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post கேரள கவர்னர் ஆடையில் தீ பிடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article