கேப்சிகம் ஃப்ரைட் ரைஸ்

2 weeks ago 6

தேவையானவை

கேப்சிகம் – 3
உருளைக்கிழங்கு -2
பாஸ்மதி – அரை கிலோ
எண்ணெய் – தேவைக்கேற்ப
கிராம்பு – 2
இலவங்கப்பட்டை – 1துண்டு
ஏலக்காய் -2
நெய் – 2 தேக்கரண்டிவெங்காயம் – 1
தக்காளி – 1
புதினா – சிறிதளவு
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
எலுமிச்சை – பாதியளவு
கொத்துமல்லி – சிறிதளவு நறுக்கியது.

செய்முறை:

பாஸ்மதி அரிசியை அரை வேக்காட்டில் சாதமாக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். பின்னர், அகலமான வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அதில் கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய கேப்சிகம், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். அதனுடன் தனியாத்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அதனுடன் தேவையான உப்பு சேர்த்து, வடித்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்து கிளறி இறக்கவும். கேப்சிகம் ஃப்ரைட் ரைஸ் தயார்.

The post கேப்சிகம் ஃப்ரைட் ரைஸ் appeared first on Dinakaran.

Read Entire Article