'கேசரி சாப்டர் 2': கதாபாத்திரத்தின் புகைப்படத்தை பகிர்ந்த அனன்யா...உடனே சுஹானா கொடுத்த ரியாக்சன்

1 month ago 13

சென்னை,

கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள படம் 'கேசரி சாப்டர் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் ஜாலியன் வாலா பாக்'. இதில் நடிகை அனன்யா பண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், 'டில்ரேட் கில்' என்ற கதாபாத்திரத்தில் அனன்யா நடித்துள்ளார்.

சமீபத்தில் அவரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனது கதாபாத்திரத்தின் புதிய புகைப்படங்களை அனன்யா வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து உடனே அவரது தோழியும் ஷாருக்கானின் மகளுமான சுஹானா கான் அனன்யாவை 'சிறந்தவர்' என்று பாராட்டி இருக்கிறார்.

இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. ஜாலியன் வாலா பாக் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர சி.சங்கரன் நாயர் பிரிட்டீஸ் ராஜ்ஜியத்திற்கு எதிராக போராடினார். இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் வருகிற 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

Read Entire Article