
சென்னை,
முரளி பிரபாகரன் தயாரிப்பில், சாய் பிரபா மீனா இயக்கத்தில், கூல் சுரேஷ், செந்தில் மற்றும் எம் எஸ் ஆரோன் நடிப்பில் மிரட்டலான கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள புதிய படத்தின் பூஜை படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.
திரைத்துறையிலிருந்து இயக்குநர் மோகன் ஜி, ரவிமரியா, பிக் பாஸ் ராணவ், ஷனம் ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.
ஒரு நாற்காலி அதில் அமரப்போகும் தலைவன் யார் எனும் போட்டி, நான்கு கேங்ஸ்டர் குழுக்களுக்கிடையே நடக்கிறது. அதில் வெல்லப்போவது யார் என்பது தான் இப்படத்தின் மையம்.
திரை வாழ்க்கையில் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த நடிகர் செந்தில் முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டராக இப்படத்தில் கலக்கவுள்ளார். இவருடன் கூல் சுரேஷ் கேங்கஸ்டராக நடிக்க, எம் எஸ் ஆரோன் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன், முரளி பிரபாகரன் , ஸ்ரீவித்யா,வாரியர் சதீஷ், விஜய் யோகன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க அதிரடி திருப்பங்களுடன் ஆக்சன் கமர்ஷியலாக உருவாகும் இப்படத்தின் ஷீட்டிங் ஆந்திரா மற்றும் கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.