கே.கே.நகர் தனசேகரனின் தாயார் அயோத்தி அம்மாள் திருவுருவ படத் திறப்புவிழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

3 months ago 10


ஆலந்தூர்: சென்னை தெற்கு மாவட்டம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவரான கே.கே.நகர் க.தனசேகரனின் தாயாரும் ராமநாதபுரம் மாவட்டம், ராஜசிங்கமங்கலம், சாத்தமங்கலம், கிராம அலுவலர் மு.கருப்பதேவர் மனைவியுமான க.அயோத்தி அம்மாள் கடந்த 18ம் தேதி சாத்தமங்கலத்தில் காலமானார். கே.கே.நகர் தனசேகரனின் தாயார் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி தேற்றினார். இந்நிலையில், மறைந்த அயோத்தி அம்மாளின் திருவுருவப் படத்திறப்பு விழா, சென்னை கே.கே.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, கே.கே.நகர் தனசேகரனின் தாயார் அயோத்தி அம்மாளின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தனசேகரனுக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏஎம்வி.பிரபாகர் ராஜா எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கனிமொழி தனசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணன், மூ.ராசா, பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், சதீஷ் கண்ணன், மைக்கேல், தினேஷ்குமார் பாலமுருகன், கதிரேசன், ரஞ்சித், வாட்டர் விஜி உள்பட பலர் பங்கேற்று, அயோத்தி அம்மாளின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post கே.கே.நகர் தனசேகரனின் தாயார் அயோத்தி அம்மாள் திருவுருவ படத் திறப்புவிழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article