
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 33 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் டெல்லி அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
கடந்த காலங்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெல்லி அணி இம்முறை அக்சர் படேல் தலைமையில் சிறப்பாக ஆடி வருகிறது. டெல்லியின் வெற்றிக்கு அக்சர் படேலின் கேப்டன்ஷிப் மட்டுமின்றி, அனுபவ வீரரான கே.எல்.ராகுலும் முக்கிய காரணமாக உள்ளார். அவரது நிலையான ஆட்டத்தால் அணியை வெற்றி பெற வைக்கிறார்.
கடந்த சீசனில் லக்னோ கேப்டனாக செயல்பட்ட ராகுலை, ஐ.பி.எல். மெகா ஏலத்தில் டெல்லி அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கே.எல். ராகுல் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை வீடியோவாக வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.