கே.எல்.ராகுல் - அதியா தம்பதிக்கு பெண் குழந்தை.. வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த டெல்லி வீரர்கள்

1 month ago 9

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல். ராகுல் தனது நீண்ட நாள் காதலியான இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியா ஷெட்டியை கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்த நிலையில் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதியினருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. இதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இருவருக்கும் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர் வித்தியாசமான முறையில் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

கையில் குழந்தையை தாலாட்டுவது போல் சைகை காட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Our family extends, our family celebrates ❤️ pic.twitter.com/lqX9g2x2wU

— Delhi Capitals (@DelhiCapitals) March 25, 2025

முன்னதாக குழந்தை பிறப்பை முன்னிட்டு டெல்லி அணியின் தொடக்க ஆட்டத்தில் கே.எல்.ராகுல் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article