கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 311.80 கனஅடி

1 week ago 4

ஓசூர், மே 6: ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக அணைக்கு நீர்வரத்து 250 கனஅடிக்கும் குறைவாக வந்த நிலையில், தமிழக பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து நேற்று 311.80 கன அடியாக அதிகரித்தது. இதனால், பாசன கால்வாய் மற்றும் ஆற்றின் வழியாக 311 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 41 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

The post கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 311.80 கனஅடி appeared first on Dinakaran.

Read Entire Article