தண்டராம்பட்டு, பிப்.25: தண்டராம்பட்டு அருகே சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தண்டராம்பட்டு அடுத்த புதூர்செக்கடி ஊராட்சி, கல்நாட்டூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(42), ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், எஸ்ஐ தமிழரசி மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியிடம் சங்கர் அத்துமீறியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சங்கரை கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கூலித்தொழிலாளி போக்சோவில் கைது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் appeared first on Dinakaran.