'கூலி' படத்துடன் மோதும் ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2'

5 months ago 31

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில், பாலிவுட் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் 'வார் 2' படமும் ஆகஸ்ட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அயான் முகர்ஜி இயக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.

இந்த இரண்டு படங்களும் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் திரையரங்கில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Read Entire Article