திருப்பூர்: கூலி உயர்வு பிரச்சினைக்கு மாநில அரசு தீர்வு காண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 12 விசைத்தறியாளர்கள் சோமனூரில் தொடர் உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளனர்.
கோவை, திருப்பூரில் விசைத்தறி தொழில் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2022-ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தக்கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவைகளுக்காக கடந்த 19-ம் தேதி முதல் விசைத்தறியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.1000-ம் கோடிக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளனர்.