சென்னை,
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்தவர் எம்.ஜி.ஆர். என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" என்று தெரிவித்துள்ளார்.