கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

1 week ago 3

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 20252026ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 20.7.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசிஎம் இப்பயிற்சி காலம் ஒரு வருடம் ஆகும். இப்பயிற்சி இரண்டு பருவ முறைகள் கொண்டது.

10, 12ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இந்த பயிற்சியில் சேரலாம். 1.7.2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 20.7.2025 மாலை 5 மணி வரை அதிகாரபூர்வ இணையதளமான www.tncu.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். இணையவழி அல்லாமல் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ மேலாண்மை நிலையத்திற்கு விண்ணப்பித்தால், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இப்பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100ஐ இணையவழி மூலம் பில்டெஸ்க் பேமென்ட் கேட்வே (Billdesk Payment Gateway) மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.20,750ஐ பில்டெஸ்க் பேமென்ட் கேட்வே அல்லது க்யூஆர் கோடு (Billdesk Payment Gateway/QR Code) செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு, பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம். எண்.5A, வந்தவாசி சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 631 501 என்ற முகவரியில் நேரில் அல்லது 0442723 7699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article