“கூட்டுறவு பொங்கல்”.. குறைந்த விலையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

1 month ago 5

சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி சாதாரண பொங்கல் தொகுப்பு ரூ.199க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999க்கும் விற்க உத்தரவிட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பானது கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள், பிரதம மந்திரி கூட்டுறவு பண்டக சாலைகளில் பரிசு தொகுப்பு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு விற்பனை சங்கம், சில்லரை விற்பனை நிலையங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த பொங்கல் தொகுப்பில்;

பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி, ஆவின் நெய் 50 கிராம், பாசிபருப்பு 100 கிராம், உலா் திராட்சை ஆகியன கொண்ட சிறிய பை ரூ.199க்கும்,

மஞ்சள் தூள், சா்க்கரை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நீட்டு மிளகாய், தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், செக்கு கடலை எண்ணெய், கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் உள்ளிட்ட 20 பொருள்கள் ரூ.499க்கும்,

மஞ்சள் தூள், சா்க்கரை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நீட்டு மிளகாய், தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், செக்கு கடலை எண்ணெய், கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், வரகு, சாமை, தினை, ரவை உள்ளிட்ட பொருள்களைச் சோ்த்து 35 பொருள்கள் ரூ.999க்கும் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த தொகுப்புடன் மட்டும் அரை கிலோ நாட்டுச் சா்க்கரை இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “கூட்டுறவு பொங்கல்”.. குறைந்த விலையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article