கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கும்பல் 5 ஆண்டுகளுக்குப்பின் கைது

1 month ago 12

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் கண்ட்ஹை கிராமத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கணவன் உயிரிழந்த நிலையில் தனியே வசித்து வந்த இளம்பெண்ணை அதேகிராமத்தை சேர்ந்த அனில், ராகேஷ் சரோஜ், சிதாலா சரோஜ் ஆகிய 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பின்னர், அந்த பெண்ணை கொலை செய்த கும்பல் அங்கிருது தப்பிச்சென்றது. தலைமறைவான கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read Entire Article