கூட்டாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் ஆயக்குடி மக்கள் கோரிக்கை

3 months ago 10

 

பழநி, பிப். 7: பழநி அருகே ஆயக்குடி மலைப்பகுதியில் வரதாமநதி அணை உள்ளது. இந்த அணை 1972ம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த அணையின் நீர்ப்பாசனத்தில் 12 குளங்கள் உள்ளன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின் நீரைத்தான் ஆயக்குடி மக்கள் குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அணையின் மொத்த கொள்ளளவு 117 மில்லியன் கனஅடி மட்டுமே ஆகும். தற்போது ஆயக்குடி பகுதியின் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. எனவே விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் வரதமாநதி அணையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூட்டாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் ஆயக்குடி மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article