கூட்டணி அரசு  என்று அமித் ஷா சொல்லவே இல்லை: பழனிசாமியின் திட்டவட்டம்

2 days ago 4

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி அரசு என்று கூறவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திமுக கூட்டணியை வீழ்த்தும் நோக்கில், அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஏப்.10-ம் தேதி சென்னை வந்த அமித்ஷா, 11-ம் தேதி ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்புக்குப்பின், மாலை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Read Entire Article