கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் சுற்றிவளைத்து கைது

1 day ago 1

தாம்பரம்: கண்டிகை பகுதியை சேர்ந்தவர் சுலக்சனா (55). இவர் கடந்த 8ம் தேதி குரோம்பேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கி, பொங்கல் பண்டிகைக்காக தனது பேரக்குழந்தைகளுக்கு துணி எடுப்பதற்காக, பிரபல துணி கடைக்கு சென்ற போது, அவரது பையில் இருந்த ரூ.6000 மாயமானது தெரியவந்தது.

இந்நிலையில் திருக்கழுக்குன்றத்தில் உள்ள அவரது அக்கா மகளுக்கு உடல்நிலை சரி இல்லை என போன் வந்ததால் தாம்பரம் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் அளித்துவிட்டு சென்ற நிலையில், நேற்று மீண்டும் காவல் நிலையம் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்தபோது, புது பெருங்களத்தூரை சேர்ந்த லட்சுமி (55) என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சுமி மீது மாம்பலம், குரோம்பேட்டை, பீர்க்கன்காரணை, தாம்பரம், மயிலம், ஒலக்கூர், திண்டிவனம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் சுற்றிவளைத்து கைது appeared first on Dinakaran.

Read Entire Article