*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கூடலூர் : தேனி மாவட்டம் கூடலூரில் நகர் மன்ற கூட்டத்திலும் அனைத்து சமுதாய கூட்டத்திலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி நகரில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகை தவிர பிற நாட்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து நகர்மன்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த தீர்மானத்தை அமல்படுத்த அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அந்த அவையிலும் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் பட்டாசு வெடிப்பது குறித்து ஆட்டோ மூலமும் நோட்டீஸ்கள் வழங்கப்படும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்பு தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டும் அவர்களுக்கு அபதாரம் விதிக்கப்படுகிறது.
ஆனால் சிலர் இந்த தடையையும், கட்டுப்பாட்டையும் மீறி பட்டாசு வெடிப்பதால் மீண்டும் சுற்றுச்சூழல் பாதிப்பும், ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுவதற்தால் நகர் மன்ற தீர்மானத்தையும் அனைத்து சமுதாய ஒத்துழைப்பையும் மீறுவோர் மீது சட்டப்படியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடலூர் வாழ் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கூடலூரில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு appeared first on Dinakaran.