கூடலூர்: கூடலூர் மரப்பாலம் பகுதியில் இன்று அதிகாலை மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், சாலையோரங்களில் உள்ள மரங்கள் சாலையில் விழும் ஆபத்து உள்ளதால், பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கூடலூர் கள்ளிக்கோட்டை சாலை மரப்பாலம் பகுதியில் இன்று அதிகாலை மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் கூடலூர் தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் தவளை மலை மற்றும் ஆகாச பாலம் பகுதிகளில் மண் மற்றும் பாறைகள் சரியும் ஆபத்தான பகுதி என்பதால், அப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் சாலையை கடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post கூடலூரில் இன்று அதிகாலை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.